சென்னை: சென்னை கடற்கரை - விழுப்புரம் மார்க்கத்தில் சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - சென்னை கடற்கரைக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு அதேநாட்களில் இரவு 7.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு செப்.11, 12 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய ரயில்கள், எழும்பூர் -சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு செப்.11, 12 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
» ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்தில் 6 நாட்கள் மழை வாய்ப்பு
» கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை
கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரைக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு செப்.10, 11 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago