சென்னை: தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்.17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு செப்.16-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.4ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்.16க்கு பதில், மறுநாள் செப்.17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்.17ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதில், செப்.17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago