நெல்லை, நீலகிரி வால்பாறை, தேனி மாவட்டம் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள், கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் வரும் வியாழன் வரை மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக்கில் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழக்தில் இடியுடன் கூடியு மழையை எதிர்பார்க்க முடியாது. அதன்பின்புதான் வெப்பச் சலனத்தால் மழையைப் பெற முடியும்.
சென்னையில் மழை?
சென்னையில் இன்று ஆங்காங்கே லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. வடமேற்கில் இருந்து வரும் காற்று, தென்மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒருங்கிணைவதால், லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. இந்தக் காற்று வேகமாக வீசுவதால், சில இடங்களில் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது, அதிலும் உறுதியாகக் கூற முடியாது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் சில நாட்களுக்கு வெயில் 38 முதல் 39 டிகிரி வரை இருக்கும்.
திருச்சி, கரூரில் காற்று
கடந்த சில நாட்களாகச் சென்னையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று மணிக்கு 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் வீசியது. இதேபோன்ற காற்று வரும் புதன்கிழமை வரை மாநிலம் முழுவதும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாகக் கோவை, திருப்பூர், திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
கனமழை எச்சரிக்கை
வால்பாறை, நீலகிரி மலைப்பகுதிகள், பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகள், நெல்லை(பாபநாசம், மாஞ்சோலை), கன்னியாகுமரி(கொடயாறு, பேச்சிப்பாறை) ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வரை மழை நீடிக்கும்.''
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago