கடலில் மூழ்கிய இந்தியரின் கப்பல்: 11 மாலுமிகளை மீட்டனர் இலங்கை கடற்படையினர்

By எஸ்.முஹம்மது ராஃபி

கொழும்பு அருகே மூழ்கிக்கொண்டிருந்த இந்தியருக்குச் சொந்தமான சரக்கு கப்பலிலிருந்து 11 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்தியருக்குச் சொந்தமான ‘முக்தா பயோனிர்’ என்ற சரக்குக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியது. அதில் பணியாற்றிய 11 மாலுமிகளும் உயிர் காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து கொழும்பிலுள்ள இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் சென்று 11 மாலுமிகளையும் மீட்டனர். பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அவர்களுக்கு முதலுதவி அளித்த பின்னர் கொழும்பு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய கொழும்பு காவல் துறையினர் கூறும்போது, ‘‘முக்தா பயோனிர் சரக்கு கப்பல் 1984-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. 2,357 டன் எடையை சுமக்கும் திறன்பெற்றது. டொமினிக்கன் குடியரசு கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 10 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்