தடையை மீறி தேனியில் விநாயகர் சிலை ஊர்வலம் - 28 பேர் மீது வழக்கு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவசேனா கட்சி சார்பில் அல்லிநகரத்தில் இருந்து ஒரு விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்துக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் போலீஸாரின் தடையை மீறி இவர்கள் ஊர்வலமாக சென்றனர். நேரு சிலை, பங்களாமேடு, மதுரை சாலை வழியே சென்ற அவர்கள் அரண்மனைப் புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் சிலையை கரைத்தனர்.

இதனையடுத்து தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தியதாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 28 பேர் மீது அல்லி நகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE