நெல்லை, குமரியில் ரம்ஜான் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

குமரி மாவட்டத்திலும் நெல்லை யில் ஒரு பகுதியிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தர்காக்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஆயிரக் கணக் கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பிறை தென்படாததால் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சவுதி அரேபியாவிலும், கேரள மாநிலத்திலும் பிறை தெரிந்ததால், ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேரளத் தைப் பின்பற்றி பக்கத்து மாவட்டமான குமரியிலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண் டாடினர்.

நாகர்கோவில் இளங்கடை பாபாகாசீம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குளச்சல் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று அதிகாலையிலேயே ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. மேலும், கன்னியாகுமரி, இடலாக்குடி, திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு, குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள தர்ஹா, பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

திருநெல்வேலி அருகே மேலப்பாளையம் அமுதா பிட்நகர் திடலில் `ஜாக்’ அமைப்பு சார்பில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. தென்காசி, காயல்பட்டினத்திலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்