இந்தியாவில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒருசிலர் புதுமையான ஆராய்ச்சிகளை செய்து தனி முத்திரை பதிக்கின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் கவுதம் ராமின் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இவர், சூரிய ஒளியை நேரடியாக மின்சார கார்களுக்குப் பயன்படுத்துவது குறித்த டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இவரது ஆய்வுக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் ‘மின்சார வாகனத் துறையில் புதிய தொழில்நுட்பத்துக்கான விருது’ வழங்கப்பட்டது.
விருது பெற்ற கவுதம் ராம், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாணவராகத் தேறிய பின், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பிடெக். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். தொடர்ந்து மேற்படிப்புக்காக நெதர்லாந்து சென்றார். அங்கு டெல்ஃப்ட் நகரத்தில் இருக்கும் 175 ஆண்டு பழமையான தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துவிட்டு, அங்கேயே ஆராய்ச்சி மாணவரானார்.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி, மின்சார கார்களை இயக்குவது குறித்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாவல் பாவரின் வழிகாட்டுதலுடன் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தார்.
தன் ஆராய்ச்சி குறித்து கவுதம் ராம் கூறும்போது, “இன்று உலகில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைதான். மின்சாரத்தில் இயங்கும் கார்களே இந்த பிரச்னைக்குத் தீர்வு என கருதப்படுகிறது. எனவேதான் எனது ஆராய்ச்சி, சூரிய ஆற்றலை பயன்படுத்துவதன் பக்கம் திரும்பியது.
எனது கண்டுபிடிப்பின்படி, கார்கள் நிறுத்தப்படும் இடங்களின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொறுத்தி, சூரிய மின்சாரம் தயாரிக்க முடியும். அந்த மின்சாரத்தை கார்களில் உள்ள பேட்டரியில் சேமித்து வைக்கலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் உண்டு. பொதுவாக சோலார் பேனல்கள் மூலம் தயாரிக்கப்படுவது நேரடி மின்சாரம் அதாவது டி.சி. எனப்படும் Direct Current. ஆனால் இந்த மின்சாரத்தை கார்களுக்கு, அப்படியே பயன்படுத்த முடியாது.
மின்பகிர்மான அமைப்புக்கு அனுப்பி, அதை ஏ.சி. என்னும் மாற்று மின்சாரமாக (Alternating Current) மாற்றித்தான் பயன்படுத்த முடியும். நான் எனது ஆராய்ச்சியின் மூலமாக உருவாக்கியுள்ள ஒரு கன்வெர்ட்டர் சூரிய ஒளியில் இருந்து வரும் டி.சி. மின்சாரத்தை உடனடியாக ஏ.சி. மின்சாரமாக மாற்றிவிடும். இதனால், சிரமமின்றி காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
சூரிய மின்சாரம் தயாரித்து 100 சதவீதம் பசுமையாக கார்களையும் இயக்கலாம். உபரியான மின்சாரத்தை மின்சார பகிர்மான அமைப்புக்கே விற்கலாம்” என்கிறார் இவர்.
பல்கலைக்கழகத்திலேயே செயல் முறை விளக்கமும் அளித்து தனது கண்டுபிடிப்பையும், அதை வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார் கவுதம் ராம். சென்னை மாணவரால் நமக்கு பெருமை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago