சென்னை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நாளை செப்.6ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:“சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான நாளை செப்.6ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, நாளை, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago