சென்னையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வாகனப் போக்குவரத்து நெரிசல். “நடைபாதை நடப்பதற்கே” என்ற வாசகம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை சாலையின் பிளாட்பாரங் களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பிளாட்பாரங்களை இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கடைகளின் விளம்பர பலகைகள், சாலையோரக் கடைகள் என பலவும் ஆக்கிரமித்துள்ளன. அதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரை என பல்வேறு பொது இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப் பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடம் குத்தகைக்கு விடப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் தவிர வேறுயாரும் வாகன நிறுத்தத்தை சரிவர ஒழுங்குபடுத்து வதில்லை. பெரும்பாலான பொது இடங்களில் வாகனங்களை யாரும் நேர்த்தியாக உரிய இடத்தில் நிறுத்தாமல் கண்டபடி நிறுத்திச் செல்கின்றனர். அதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பல இடங்களில் வாய்த் தகராறு, அடிதடி எல்லாம்கூட நடந்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் தெற்கு பகுதி சுற்றுச்சுவரை பலரும் அசுத்தப்படுத்தி வந்தனர். அத்துடன் வாகனங்களையும் இஷ்டத்துக்கு நிறுத்திவிட்டு சென்றனர். அதனால், அந்த பகுதியில் வசிப்பவர்களும் கோயிலுக்கு வந்து செல்வோரும் பெரிதும் சிரமப்பட்டனர்.
» வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தங்கள் திருட்டு: 4 பேர் கைது; 2 தந்தங்கள் பறிமுதல்
இந்த நிலையை மாற்றுவதுடன் அந்த இடத்தை தூய்மையாக பராமரிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கோயில் நிர்வாகமும், சைமா என்ற அமைப்பும் இணைந்து தெற்கு பகுதி சுற்றுச்சுவரையொட்டி பூங்கா அமைத்தனர். மேலும், இருசக்கர வாகனங்களை தனித்தனியாக நிறுத்தி சிரமம் இல்லாமல் எடுத்துச் செல்வதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு புதிய வசதியுடன் வாகன நிறுத்தத்தை உருவாக்கினர்.
இதனால் கோயில் சுற்றுச்சுவர் அசுத்தப்படுவது தடுக்கப்பட்டதுடன் அந்தப் பகுதியில் வசிப்ப வர்களும், கோயிலுக்கு வந்து செல்வோரும் தங்களது இருசக்கர வாகனங்களை எவ்வித சிரமமும் இல்லாமல் நிறுத்தி எடுத்துச் செல்ல முடிகிறது. இப்புதிய வசதி அனைவரது கவனத் தையும் ஈர்த்துள்ளது. இதுபோன்ற வாகன நிறுத்த வசதியை ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் அனைத்து கோயில்களிலும் ஏற்படுத்தித் தர வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் எதிர்பார்க்கின்றனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago