விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்கள் 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் செப்.6 (சுபமுகூர்த்தம்), செப்.7 (விநாயகர்சதுர்த்தி), செப்.8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறுஇடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகசிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகியஇடங்களுக்கு செப்.6, 7, 8 தேதிகளில் 1,755பேருந்துகள், செப். 6, 7 தேதிகளில் சென்னை,கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்படும்.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிறபகுதிகளுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 2,315 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை சொந்தஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE