விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்: சென்ட்ரல், தாம்பரத்தில் இருந்து இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும், தாம்பரத் தில் இருந்து செங்கோட்டை வழியாக கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரலில் இருந்துசெப்.6-ம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06151) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து செப்.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06152) புறப்பட்டு, மறுநாள் காலை 7.35மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து செப்.6, 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.30மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06035) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.30 மணிக்கு கொச்சு வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து செப்.7, 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06036) புறப்பட்டு, மறுநாள் காலை 7.35மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு சிறப்பு ரயிலும் அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE