சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு விமானங்கள் ரத்து

By சி.கண்ணன்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்.3) ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

லண்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வரும் விமானம், மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட வேண்டும். சென்னையில் இருந்து அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 284 பயணிகள் காத்திருந்தனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் லண்டனில் இருந்து புறப்படாததால், அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், நாளை காலை விமானம் சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் என்றும் அதிகாலை 5.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோல், சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா பயணிகள் விமானம், பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.05 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்