குன்னூர்: குன்னூரில் குடியிருப்பு பகுதியில் மரத்தில் தஞ்சம் அடைந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தற்போது பழங்களின் சீசனாக இருப்பதால் பழங்களை உண்ண வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதியில் கரடிகள் வருவது அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், குன்னூர் சப்ளை டிப்போ குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் மரத்தில் கரடி ஓய்வெடுத்ததை, அந்தப் பகுதியில் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
» பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: 7.5% ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
» கோவில்பட்டியில் மர தடி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago