நெடுஞ்சாலை துறை மறுசீரமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தர 5 அதிகாரிகள் கொண்ட குழு: தமிழக அரசு ஆணை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறைசெயலர் ஆர்.செல்வராஜ் வெளியிட்ட அரசாணை:

‘நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தபொறியாளர்களுடன் பாலங்கள்சிறப்பு அலகு உருவாக்கப்படும்’என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, நெடுஞ்சாலை துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்வது குறித்தும்5 ஆண்டுகளுக்கு மேல் காலியாகஉள்ள பணியிடங்களின் தேவைகுறித்து பரிசீலிக்கவும், அமைச்சரின் அறிவிப்புகள் தொடர்பாகவும் விரிவாக ஆய்வு செய்து பரிந்துரைவழங்க 5 பேர் குழுவை நியமிக்குமாறு அரசுக்கு துறையின் முதன்மை இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.

இதை அரசு ஆய்வு செய்ததன்பேரில், நெடுஞ்சாலை துறையில் சீரமைப்பு, பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு உருவாக்குதல் போன்றவை குறித்து விரிவாகஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க ஆய்வு குழு அமைக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை முதன்மைஇயக்குநர் இரா.செல்வதுரை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை பொது மேலாளர்ச.பழனிவேல், சென்னை தேசியநெடுஞ்சாலை துணை தலைமை பொறியாளர் டி.சிவக்குமார், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் - பராமரிப்பு தலைமை பொறியாளர் கு.கோ.சத்திய பிரகாஷ் (சென்னை), கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி (திருவண்ணாமலை) ஆகியோர்அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்