அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 8.20, 9.10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.30-ம் தேதி காலை 10.15 மணிக்கும், ஆக.30, 31, செப்.1 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.30, 31, செப்.1 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15, நண்பகல் 12, மதியம் 1.50 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - திருத்தணிக்கு செப்.1-ம் தேதி நண்பகல் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு செப்.1-ம் தேதி நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - அரக்கோணத்துக்கு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு செப். 1-ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு செப்.1-ம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட ்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்