பி.எஸ்.கல்வி சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ளபி.எஸ். கல்வி சங்கத்தின் 50-ம்ஆண்டு பொன்விழா கொண்டாட் டம், வரும் 31-ம் தேதி (சனிக் கிழமை) தொடங்குகிறது.

பென்னாத்தூர் சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்ட பி.எஸ். கல்வி அறக்கட்டளையின்கீழ் 1974-ல் உருவானது பி.எஸ். கல்விசங்கம். இந்த சங்கத்தின் சார்பில்நடத்தப்படும் பல்வேறு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கல்வி சங்கத்தின் பொன் விழா ஆண்டு தொடக்கநிகழ்ச்சி, 31-ம் தேதி (சனி) மாலை மயிலாப்பூரில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் ஆர்.சிதம்பரம், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் வி.காமகோடி ஆகியோர் பங்கேற்று பொன்விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கின்றனர். இவர்கள் இருவரும் பி.எஸ். பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்.7-ல் நிறைவு விழா: செப்.7-ம் தேதி (சனி) மாலை நடைபெறும் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி.எஸ். கல்வி சங்கத்தின் தலைவர் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், செயலாளர் சி.வி.கிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE