ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, மதுவிலக்குப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பெண்ணைக் கடத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்பந்தப்பட்ட பெண்ணை திண்டுக்கல் அருகில் மீட்டனர். கடத்தல் வழக்கில் தலைமறைவான சப் இன்ஸ்பெக்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் முனியப்பன்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (33). கோபி மதுவிலக்குப் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறர். இவரது மனைவி சத்யா (25). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சத்யாவின் பெரியப்பா வேலுச்சாமியின் மகள் திவ்யபாரதி (23). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று தேர்வு எழுதச் சென்ற திவ்யபாரதி வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், வேலுச்சாமியைத் தொடர்பு கொண்ட எஸ்.ஐ. வெங்கடாசலம், “உங்கள் மகள் திவ்யபாரதி என்னுடன் உள்ளார். அவரைத் தேட வேண்டாம். நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, திருமணமான வெங்கடாசலம், தனது மகளைத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததால், அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி, அந்தியூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், திண்டுக்கல் பகுதியில் வெங்கடாசலம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார் திண்டுக்கல் சென்றனர். தனது மனைவி சத்யா, குழந்தைகள் மற்றும் திவ்யபாரதி ஆகியோருடன் காரில் சென்று கொண்டு இருந்த வெங்கடாசலம், போலீஸார் தன்னைத் தேடுவதை அறிந்து, சேவதண்டான்பட்டி சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.
அந்தியூர் போலீஸார் வெங்கடாசலத்தின் மனைவி சத்யா, அவரது குழந்தைகள், கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட திவ்யபாரதி ஆகியோரை மீட்டு, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், திவ்யபாரதி அவரது தந்தை வேலுச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள வெங்கடாசலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago