பிரதமர் மோடிக்கு நெருக்கமான புதுச்சேரி ஆளுநரை சந்தித்தார் நடிகர் விஜய்சேதுபதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நடிகர் விஜய்சேதுபதி இன்று (ஆக.28) திடீரென ராஜ்நிவாஸில் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசி திரும்பினார்.

இந்நிலையில், புதுச்சேரி ராஜ்நிவாஸில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி, ஆளுநர் கைலாஷ்நாதனை இன்று சந்தித்து உரையாடினார். இதுபற்றி ராஜ்நிவாஸ் தரப்பில் விசாரித்தபோது, “சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி வந்துள்ளார். அவர் அடிக்கடி புதுச்சேரி வரும் நிலையில், புதிய ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சிறிது நேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்