வேலூர்: ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி’ என விஐடி வேந்தர்கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
தமிழியக்கம், விஐடி பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வேலூர்விஐடி பல்கலைக்கழக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதிபேசும்போது, ‘‘கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில்கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர்தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை’’ என்றார்.
» ரூ.4.27 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் உலகின் டாப் 10 வாகன உற்பத்தி பட்டியலில் டாடா மோட்டார்ஸ்
» 7,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்: 102 வயதில் இங்கிலாந்து மூதாட்டி சாதனை
உதாரணமாகத் திகழ்ந்தவர்: தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கிபேசும்போது, ‘‘ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளைச் செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி. பள்ளிப் படிப் புடன் நின்றுவிட்டாலும் தனதுமுயற்சியால் தொல்காப்பியத் துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.
மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14வயதிலேயே அரசியலுக்கு வந்தகருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம்,சினிமா வசன கர்த்தாவாகத் திகழ்ந்தார். மத்திய அரசுடன் நல்ல உறவுஇருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சிஎன்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்’’ என்றார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று அவருக்கு விஐடியில் சிலை வைக்க வேண்டும். சாதாரணகுடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில்போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கைபிடிப்புதான் காரணம்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள்முதல்வர் கருணாநிதி உடன்இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் எம்.பி. டி.எம்.கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அமலு விஜயன், முன்னாள் அமைச்சர் தமிழரசி,வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர்விசுவநாதன், சேகர் விசுவநாதன், கோ.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago