‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: கட்டுப்பாடுகள் இன்றி நடத்தப்படுவதாக பாஜக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி என்பதை ஒவ்வொரு பகுதிக்கும் முன்மாதிரியாக இருக்கும் வகையில் கொண்டாட வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை கல்வி, விளையாட்டு, கலை, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை, புதுமைகளை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது, திறமைகளை வெளிப்படுத்தும் போது உண்மையில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்களின் மூலம் சமூக வளர்ச்சி ஏற்படும்.

ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும் ஆடல், பாடல் என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கான சூழ்நிலையை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் உருவாக்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வருபவர்களின் பலர் தன்னிலை மறந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே 'ஹேப்பி ஸ்ட்ரீட்' போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்