சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அன்று அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, நாணயத்தை வெளியிட்டதற்கு முதல்வரை சந்தித்து தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்தார்.
தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தையும் முதல்வரிடமிருந்து கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். மேலும், முதல்வர் விரைவில் செல்லவிருக்கும் அமெரிக்க பயணத்துக்கும் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago