நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்


நத்தம்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையடிவார கிராமமான ஆவிச்சிபட்டியில் அனுமதியுடன் வெடி தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. நேற்று இரவு சிவகாசியை சேர்ந்த பணியாளர்கள் இருவர் வெடி தாயரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த இருவர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸார் அதிகாலையில் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவர்கள் சிவாகாசியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகியுள்ளார். நத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்