மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தவெக கொடியை வைத்து கட்சியினர் வழிபாடு

By என்.சன்னாசி

மதுரை: நடிகர் விஜய் நேற்று அறிமுகம் செய்த தவெக கட்சியின் கொடியை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து அவரது கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கான அதிகாரப்பூர்வ கொடி மற்றும் கட்சிப் பாடலை வியாழக்கிழமை சென்னை பனையூரில் விஜய் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து மதுரை உட்பட தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில், விஜய் கட்சியின் கொடியை பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டனர்.

அதற்காக இன்று (ஆக.23) காலை திரைப்பட நடிகரும், தவெக நிர்வாகியுமான சவுந்தரராஜன் தலைமையில் மதுரை மாவட்ட தவெக-வினர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் கட்சியின் கொடியை மீனாட்சி அம்மன் சன்னதி முன்பாக வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை கைகளில் வைத்து அசைத்தபடி பறக்க விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்