45 அடி உயர கம்பத்தில் கொடியேற்றிய விஜய்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கான கொடியை நேற்று அறிமுகம் செய்தார். அத்துடன்,கொடி பாடலையும் அறிமுகப்படுத்தினார்.

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவரது இல்லத்துக்கு செல்லும் வழியெங்கும் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.15 மணிக்கு விழா அரங்குக்கு வந்தவிஜய், 9.30 மணி அளவில் கொடியை அறிமுகம் செய்து, கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து 45அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். கொடியில் மொத்தமுள்ள 28 நட்சத்திரங்களில் 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் உள்ளன.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கொடி பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது. எக்ஸ்வலைதளத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்பது நேற்று டிரெண்டிங்கில் இருந்தது. 1 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இடம்பெற்றன. பச்சை-வெள்ளை நிற பூக்களை கொண்டதே சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட வெற்றி வாகைஎன்றும் தவெக கொடியில் இடம்பெற்றிருப்பது தூங்கு மூஞ்சி வாகைஎன்றும் கூறப்படுகிறது. கொடியில் இடம் பெற்றிருப்பது ஆப்பிரிக்கயானை. இந்திய யானை இல்லை.

நிகழ்ச்சிக்கு தனது தாய், தந்தைவந்தது மகிழ்ச்சி என விஜய் கூறினார்.ஆனால், புறப்படும்போது அவரைதாய் ஷோபா அழைத்த நிலையில்கண்டு கொள்ளாமல் சென்றார்.இந்த காட்சி தொடர்பான காணொலியை பகிர்ந்து இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE