சென்னை: சென்னை எழிலகத்தில் ரூ.5.12 கோடியில்பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வது, முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகளை வழங்க வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளத் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பேரிடர் தொடர்பான பணிகளில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், மக்களுக்கு பேரிடர்முன்னெச்சரிக்கை வழங்கும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 1,400 தானியங்கிமழை மானிகள் மற்றும் 100 தானியங்கிவானிலை நிலையங்கள், ராமநாதபுரம்,ஏற்காடு பகுதிகளில் 2 ரேடார்கள் அமைக்கும் பணிகளை தமிழக அரசுமேற்கொண்டு வருகிறது. அத்துடன், பல்வகை பேரிடர் முடிவு ஆதார அமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மழை,புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஆகியவை குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மையின் இதர துறைகளுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறது.
புயல் மற்றும் பருவமழைக் காலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலஅவசரகால செயல்பாட்டு மையத்துக்குநேரில் வந்து, உயர் அதிகாரிகள் மற்றும்மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டு வருகிறார்.
இந்நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநில அவசரகால செயல்பாட்டுமையம் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில்ரூ.5.12 கோடி செலவில் பலவகை பேரிடர் முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின்திறந்து வைத்தார். அதன்பின் மையத்தை பார்வையிட்ட முதல்வருக்கு அதன் செயல்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கினார்.
இம்மையத்தில், பேரிடர் காலத்தில், முதல்வர் மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கும் வகையில் காணொலி வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை , பேரிடர் காலங்களில், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பேரிடர் ஆயத்த நிலை, மீட்பு, நிவாரணப் பணிகளைமேற்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு 70 இருக்கைகள் கொண்ட அரங்கம், பொதுமக்கள் தங்கள்புகார்களை பதிவு செய்யும் வகையில் 1070 மற்றும் 112 என்ற கட்டணமில்லா தொலை பேசியுடன் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அவசரகால அழைப்புமையம், பல்வேறு துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் எச்சரிக்கை செய்திகள் வழங்கும் வகையிலான பேரிடர் தொழில்நுட்பப் பிரிவு,மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 48 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் செயல்படும் வகையில் பல்துறை ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் துறை செயலர்பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை இயக்குநர் வி.மோகனச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago