பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் அதிக வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள்: ஊழியர்களுக்கு செலுத்தும் பிஎப் தொகைக்கான சலுகை அதிகரிப்பு; 12 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு

By ப.முரளிதரன்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், அதிகளவு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர் களுக்கு செலுத்தும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய தொகையை 8.33 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2016-17-ம் ஆண்டுக் கான மத்திய பட்ஜெட் உரையில், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அதிகளவு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு செலுத்த வேண் டிய வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய தொகையான 8.33 சதவீதத்தை மத்திய அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வருங்கால வைப்பு நிதிக்கான சலுகையை 8.33 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மண்டல வருங் கால வைப்பு நிதி ஆணையர் சலீல் சங்கர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

``தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்தி வருகின்றன. இதில், நிறுவனங்கள் செலுத்தும் 12 சதவீத தொகையில், 8.33 சதவீதம் ஓய்வூதியத்துக்கும், எஞ்சிய தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் செல்லும். இந்த நிதியை ஊழியர்கள் தங்களது அவசர தேவைக்களுக்காகவும், பணி யில் இருந்து ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், சமூகத்தில் அதிகளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, மத்திய அரசு பிரதம மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஓர் சலுகை வழங்கப்பட்டது. அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியமாக செலுத்த வேண் டிய 8.33 சதவீத தொகையை மத்திய அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், இந்த வருங்கால வைப்பு நிதிக்கான சலுகையை 8.33 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்புதிய சலுகை இம்மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சலுகையைப் பெற புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருத்தல் வேண்டும். ஊழியர்கள் முதன்முறையாக வருங்கால வைப்பு நிதி செலுத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.

மேலும், ஊழியர் பணியில் சேர்ந்த 3 வருடங்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும். இதன்மூலம், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, நிறுவனங்களும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்