கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: குரங்கு அம்மை பரவலை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை 116 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளதா என கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கோவையிலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கரோனா நோய்தொற்று பரவலை தொடர்ந்து தற்போது வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் இயந்திர உதவியுடன் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. குரங்கு அம்மை பரவல் தொடர்பான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை குரங்கு அம்மை அறிகுறிகளுடன் பயணிகள் யாரும் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் இந்நோய் பரவல் தற்போது வரை கண்டறியப்படவில்லை எனவே யாரும் பீதியடைய தேவையில்லை.” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE