டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுப்பதற்காக பில்லிங் இயந்திரங்களைப் பயன்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2,500 டாஸ்மாக் கடைகளில் பில்லிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டன. ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் பெரும்பாலான இயந்திரங்கள் மூலம் வாடிக்கையாளர் களுக்கு பில் வழங்கப்படுதில்லை. இதனால், மதுபானங்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:
``மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் ரசீதுகளை கையினால் எழுதும்போது ஏற்படும் தாமதம் மற்றும் தவறுகளைத் தவிர்க்கவும் சில்லறை விற்பனைக் கணக்குகள் மற்றும் சரக்கு இருப்பு விவரங்களைச் சுலபமாகப் பராமரிப்பதற்காகவும் பில்லிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
பில்லிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டாலும், பில்லிங் கவுன்ட்டர் என்று தனியே ஏதும் இங்கு இல்லை. 50 பேர் கடைக்கு வந்தாலும் அவர்கள் மொத்தமாக பணத்தை நீட்டுகின்றனர்.
கேரளாவை பொறுத்தவரை வரிசையில் நின்று எந்த மதுபானம் வேண்டுமோ அதற்குரிய பணத்தைச் செலுத்தி முதலில் ரசீது வாங்க வேண்டும். அதன் பிறகுதான், மதுபானத்தை வாங்க முடியும். அந்த நடைமுறை இங்கு இல்லை.
முறையாக பில் வழங்க பில்லிங் கவுன்ட்டர் தனியாகவும் மதுபாட்டில்களை அளிக்கும் கவுன்ட்டர் தனியாகவும் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கடைகளின் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தந்தாலும், எந்த கடையிலும் கழிப்பறை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட கிடையாது. கேரளாவின் நடைமுறையை பின்பற்றினால் மட்டுமே கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க முடியும். அதேபோன்று பணியாளர்களுக்கு கேரள அரசு வழங்கும் சம்பளத்தை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
சொந்த பணத்தில் செலவு
டாஸ்மாக் கடை ஊழியர்கள் சிலர் கூறும்போது, “வாடிக்கையாளருக்கு பில் வழங்குவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. இப்போதும்கூட கேட்பவர்களுக்கு பில் அளித்து வருகிறோம். பில் வழங்க வேண்டுமெனில் வாடிக்கையாளர்களை வரிசை யில் வரச் சொல்ல வேண்டும். ஆனால், அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே பில் வழங்க முடியாததற்கு காரணம். மேலும், பில்லுக்கான பேப்பர் ரோலை டாஸ்மாக் நிர்வாகம் சரியாக வழங்குவதில்லை. இயந்திரம் பழுதானாலும் உரிய நேரத்தில் சரிசெய்து கொடுப்பதில்லை. பழுதுகளைச் சரிசெய்ய எங்களின் சொந்தப் பணத்தை அளிக்க வேண்டியுள்ளது.
டாஸ்மாக் கடை எப்போது திறக்கப்பட்டது, எப்போது மூடப்படுகிறது என்ற தகவலை அனுப்ப மட்டுமே பில்லிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, குறைபாடுகளைக் களைய டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பில் கட்டாயமாக்கப்படும்
இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “டாஸ்மாக் கடைகளில் உள்ள இருப்பு, விற்பனை விவரங்கள் உள்ளிட்டவற்றை இணையதளம் மூலம் கண்காணிக்கும் வகையில் கடைகளை கணினிமயமாக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு டிஜிட்டல் மயமாக்கும் போது பில்லிங் கட்டாயம் ஆகும். அப்போது தவறுகள் முழுமை யாக தவிர்க்கப்படும். டாஸ்மாக் கடைகளில் இப்போதும் பில் கேட்டால் ஊழியர்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago