சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 வரை அவகாசம்: மாநில சுற்றுலா துறை ஆணையர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில சுற்றுலாத் துறை ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருமான சி.சமயமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்தஉணவகம், சிறந்த சுற்றுலாவழிகாட்டி என 17 வகையான விருதுகள் இதில் அடங்கும்.

2024-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 20-ம்தேதிக்குள் (நேற்று) விண்ணப்பிக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுவிண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்படுகிறது.

எனவே, சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவத்தை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்த விண்ணப்பத்தை ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுலா விருதுகள் செப். 27-ம் தேதி வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்