அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வரும் ஆக.24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நூலாக எழுதியுள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் வரும் ஆக.24-ல் (சனிக்கிழமை) நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நூலை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்குகின்றனர். நூலை எழுதிய அமைச்சர் வேலு ஏற்புரை வழங்குகிறார். சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர் நன்றியுரையாற்றுகிறார்.
» காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு
» சில மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago