சென்னை: பெரம்பூர் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை அடி நீள இரும்பு துண்டு வைத்து, ரயிலை கவிழ்க்க சதித் திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-யிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் அதிகாலை 4.22 மணிக்கு பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸ் நிலையத்தை கடந்து வந்தபோது, தண்டவாளத்தில் ஒன்றரை அடி நீளம் கொண்ட ஓர் இரும்பு துண்டு இருப்பதை ரயில் ஓட்டுநர் கண்டார்.
உடனடியாக, ரயிலை நிறுத்த முடியாது என்பதால், லேசான வேகத்தில் இயக்கினார். ரயில் இரும்பு துண்டு மீது ஏறியதில், இரும்பு துண்டு இரண்டாக உடைந்தது. தொடர்ந்து, சிறிது தூரத்தில் ரயிலை நிறுத்தி, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், பெரம்பூர் ரயில்வே போலீஸாருக்கும் ஓட்டுநர் தகவல் கொடுத்தார்.
ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று, இரும்பு துண்டை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் ரயில் ஓட்டுநரிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பெரம்பூர் ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து, தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரயிலை கவிழ்க்க சதித் திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago