திருவண்ணாமலை அருகே பரிதாபம்: கிணறு தோண்டும்போது மண் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டமலம் அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் வசிப்பவர் பாலு. இவருக்கு சொந்த விவசாய கிணற்றை தூர்வாரும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. அப்போது கிணற்றில் இருந்த பாறைகளுக்கு வைக்கப்பட்ட வெடிகள் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி தொழிலாளர்கள் தங்கராஜ், குமார், சீத்தாராமன் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக, தகவலறிந்த வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்