ஆக.23-ல் கமல்ஹாசன் தலைமையில் மநீம செயற்குழு கூட்டம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மநீம பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறும்போது, "கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கவுள்ளோம். குறிப்பாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை கட்சித் தலைவர் வழங்கவிருக்கிறார்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்