போக்குவரத்து கழக பிரச்சினைகளை மக்களிடையே எடுத்து செல்லும் வகையில் 5 லட்சம் நோட்டீஸ் வழங்க தொழிற்சங்கம் முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துக் கழக பிரச்சினைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் 5 லட்சம் நோட்டீஸ் விநியோகிக்க அண்ணா தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாத நிலையில், 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகும் சூழலில் தற்போதுதான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது போலவே போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் நோட்டீஸ் விநியோகிக்க அண்ணா தொழிற் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக போக்குவரத்துக் கழகபிரச்சினைகள் இடம்பெறும் வகையில் 5 லட்சம் நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பாக முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெறும்வகையில் இவற்றை விநியோகிக்கஉள்ளோம் என்றார்.

முன்னதாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான போக்குவரத்து பிரிவில் இடம்பெற்றிருக்கும் 20-க்கும்மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரவைத்தலைவர் தாடி ம.ராசு தலைமைவகித்தார்.

செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், வரும் 27-ம் தேதி நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், கூட்டமைப்பு சார்பில் பொது கோரிக்கை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்