சென்னை மெட்ரோ ரயில்களின் பராமரிப்பில் நவீன வசதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையின் பராமரிப்பு பிரிவில், அதன் செயல் திறனை மேம்படுத்தும் வகையில், அதி நவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, ஆலோசகர் ராமசுப்பு, தலைமை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரயில்களின் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, பழுது பார்த்து சரி செய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. கருவி தொகுப்புகளின் கிடங்கு, திறமையான பராமரிப்பு செயல்பாடுகளை மேம்படுத்தும். இந்த உள் கட்டமைப்பால் பராமரிப்பு செலவுகள் குறைந்து, புதுமையை வளர்க்க உதவும்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE