குன்னூர் அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்த 12 அடி மலைப்பாம்பு மீட்பு

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: குன்னூர் கொலக்கொம்பை அருகே கோட்டக்கல் எஸ்டேட் தோட்டத்தில் பதுங்கி இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கம்பை அருகே கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள தேயிலை தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக அப்பகுதி தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிறகு அந்தப் பாம்பை கொலக்கம்பை அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். வனத்துறையினர் இது குறித்து கூறும் போது, “சுமார் 12 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பு அங்கு உணவை உட்கொண்டுவிட்டு அங்கிருந்து செல்லமுடியாமல் அதே இடத்தில் இருந்தது. அதை மீட்டு வனத்துக்குள் பாதுகாப்பான இடத்தில் விட்டுள்ளோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE