வேலூர்: அரசுப் பேருந்தில் பயணம் செய்தபார்வையற்ற தம்பதி கீழே இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற பெண் தவறி கீழே விழுந்தார்.
அப்போது, பார்வையற்ற தம்பதியை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரையடுத்து, அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும்ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் கணபதி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்கள் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.
பள்ளிகொண்டா வந்தவுடன் இருவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், பார்வையற்ற பெண் விசாலாட்சி தவறி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.
» பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய்
» சீன கேமிங் மூலம் ரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை
மேலும், இதுகுறித்து பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் விளக்கம் கேட்டபோது, நடத்துநர் அலட்சியமாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கண்பார்வையற்ற ராமதாஸிடம் பேருந்துஓட்டுநர் "தினமும் இந்தப் பேருந்தில் மட்டும்தான் வருவீர்களா? வேறு பேருந்தே உங்களுக்கு கிடைக்காதா?" என்று அலட்சியமாக பேசினாராம்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் செந்தில் மற்றும் நடத்துநர் பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் கணபதி நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago