சென்னை: நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“சாதி, மத,மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம். எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்” என சமூக வலைதளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி - செங்கோட்டையில் பிரதமர் மோடி மற்றும் சென்னை - கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி, கொடி வணக்கம் செய்தனர். தேசம் முழுவதும் பல்வேறு மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago