மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை பாஜக நிர்வாகி போலீஸில் புகார் மனு அளித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் ராஜ்குமார் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை பரவை பேரூராட்சியில் கடந்த 12 ம் தேதி அதிமுக கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி எம் எல் ஏ செல்லூர் ராஜூ பேசும் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் தர குறைவாகவும், ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துகின்ற வகையிலும் விமர்சித்துள்ளார்.
இது போன்று அவர் தொடர்ந்து அண்ணாமலையை பொது இடங்களில் விமர்சித்து வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. காளவாசல் மண்டல் தலைவர் பிச்சை வேல் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பால முருகன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago