ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியான அஸ்வத்தாமனை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக் கில் வட சென்னையைச் சேர்ந்த பிரபலரவுடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் சமீபத்தில் கைதானார்.

இவரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி செம்பி யம் காவல் நிலைய ஆய்வாளர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குவந்தது.

அப்போது பூந்தமல்லி கிளைசிறையில் இருந்த அஸ்வத்தாமன் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அஸ்வத்தாமனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேலூர் சிறையில் இருந்து வரும் ரவுடி நாகேந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் வைப்பதற்காக இன்று (புதன்) எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்