சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.
இதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கொல்லம் (வண்டி எண்.16101), கன்னியாகுமரி (12633), நாகர்கோவில் (12667), ராமேசுவரம் (16751), தூத்துக்குடி முத்துநகர் (12693), கொல்லம் அனந்தபுரி (20635), திருநெல்வேலி (12631), செங்கோட்டை பொதிகை (12661), காரைக்கால் (16175), மதுரை தேஜஸ் (22671), ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி (12652) ஆகிய விரைவு ரயில்கள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.
இதேபோல், வெளியூர்களில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வந்தடையும் கொல்லம் (16102), சேலம் (22154), தஞ்சாவூர் உழவன் (16866), நாகர்கோவில் (22658), செங்கோட்டை (20682), காரைக்கால் (16176), மதுரை (22624), முத்துநகர் (12694), குருவாயூர் (16128), மதுரை தேஜஸ் ஆகிய விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது.
எனினும், பயணிகளின் வசதிக்காக மேற்கண்ட அனைத்து விரைவு ரயில்களும் ஆக. 15, 16, 17 தேதிகளில் செங்கல்பட்டில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
» ரஷ்ய ராணுவத்தில் இருந்து இந்தியர்கள் விடுவிப்பு: பிரதமர் மோடியிடம் புதின் உறுதி
» குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை: மாணவிகள் உயர்கல்வி பெற அசாமில் ரூ.2,500 நிதியுதவி
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago