அரசுப் பேருந்து ஒன்றில் பயணிப்பவர்களுக்காக குடிநீர் வழங்கி வரும் பேருந்து ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் செல்கிறது 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து. இதில் பணியாற்றி வரும் ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகிய இருவரும் தங்கள் அன்றாட அரசுக் கடமை தவிர வெயிலில் பேருந்தில் பயணிக்கும் மக்களுக்காக பொதுச் சேவையிலும் இறங்கியுள்ளார்கள்.
இதுகுறித்து இவர்கள் தெரிவிக்கையில், ''தினமும் நாங்கள் பணிக்குச் செல்லும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது கடுமையான வெயில் வாட்டுகிறது. ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும்.
எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள். அவர்கள் எல்லோரும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.
அதனால் பல நாட்கள் பலபேர் தாகத்தில் தவித்திருக்கிறார்கள். நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை எடுத்துக் குடிக்கும்போது சார் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது.
எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம். இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்கத் தண்ணீர் வைத்து வருகிறோம்.
நாங்களும் அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மாதிரி ஆச்சு; நாலு பேருக்கு நல்லது செஞ்ச மாதிரியும் ஆச்சு'' என்றவர்கள் தொடர்ந்தனர்.
''கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படிச் செய்து வருகிறோம். இனி கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.
அவர்களது மனிதநேயக் கடமை உணர்ச்சிக்காக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago