நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, 29 விரைவு ரயில்களின் சேவையில் ஆக.14-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, சில விரைவு ரயில்களின் சேவையில் ஆக.17-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.16-ம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய பொதிகை விரைவு ரயில் (12661), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (12633), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - தூத்துக்குடிக்கு ஆக.15, 17 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு முத்து நகர் விரைவு ரயில்(12693), சென்னை எழும்பூர் - மதுரைக்குஆக.15-ம் தேதி இரவு 9.40 மணிக்கு பாண்டியன் விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு ஆக.15-ம் தேதி இரவு 10.15 மணிக்கு உழவன் விரைவு ரயில் (16865) ஆகிய ரயில்கள் எந்த மாற்றமும் இன்றி புறப்பட்டு செல்லும்.

செங்கோட்டை - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் பொதிகை விரைவு ரயில் (12662), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டில் நிறுத்தப்படும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் விரைவு ரயில் (12632), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூருக்கு ஆக.15-ம் தேதி புறப்படும் விரைவு ரயில் (12634), செங்கல்பட்டு -எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பி விடப்படும் ரயில்கள்: கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு ஆக.14-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (12641), விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக திருப்பிவிடப்பட உள்ளது. கூடுதல் நிறுத்தமாக, பெரம்பூர் ரயில் நிலையத்தில் காலை 10.55 மணிக்கு நின்று செல்லும்.

ஹவுரா - திருச்சிராப்பள்ளிக்கு ஆக.15-ம் தேதி விரைவு ரயில் (12663), பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக திருப்பிடப்படும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம் மார்க்கத்தில் செல்லாது.

சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு ஆக.17-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (16175), 1.25 மணி நேரம் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்