கடல்நீரை குடிநீராக்கும் ஆலை கட்டுமான பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் பகுதியில் ரூ.4,077 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பேரூர் பகுதியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.4,276 கோடியே 44 லட்சம் மதிப்பில், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் மேற்கண்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய குடிநீர் ஆலையின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து, அப்பகுதியில் குடிநீர் ஆலைஅமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட புதியகடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமான பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என்.நேரு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைமுதன்மை செயலர் தா.கார்த்திகேயேன், சென்னை குடிநீர் வாரியமேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி, சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்