சென்னை: ‘‘பட்டு துணி வகைகள் வாங் கும்போது சில்க் மார்க் முத்திரை உள்ளதா என பொது மக்கள் கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம், மோசடிகளை தவிர்க்க முடி யும்’’ என இந்திய சில்க் மார்க் நிறுவனத்தின் உதவி செயலாளர் கே.எச்.ஹேமாஸ்ரீ கூறினார்.
மத்திய ஜவுளித் துறையின் கீழ் செயல்படும் மத்திய பட்டு வாரியத்தின் இந்திய சில்க் மார்க் நிறுவனம் மற்றும் குடி மக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து சில்க் மார்க் குறித்த விழிப்புணர்வு முகாம், சென்னை, அம்பத்தூரில் உள்ள அன்னை வயலெட் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், சில்க் மார்க் நிறுவனத்தின் உதவி செயலாளர் கே.எச்.ஹேமா பங்கேற்று பேசியதாவது: இந்தியா, இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தி செய்யும் நாடு மற்றும் உலகின் மிகப் பெரிய நுகர்வோர் நாடாக உள்ளது. நாட்டின் 25 மாநிலங் களில் உள்ள 59 ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இத்தொழிலில் ஈடு பட்டுள்ளனர்.
மல்பெரி, தாசர், எரி மற்றும் முகா ஆகிய 4 வகை பட்டுகள் உள்ளன. இவை அனைத்தை யும் உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா. இந்திய சில்க் மார்க் நிறுவனம், கடந்த 2004-ம் ஆண்டு புதிய சில்க் மார்க் முத்திரையை அறிமுகப்படுத்தியது.
» வங்கதேசத்தில் மேலும் ஒரு கோயில் மீதான தாக்குதலை முறியடித்த இந்துக்கள்
» ‘தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக 10 நாடுகளின் விமானப்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி
போலியான பட் டினை வாங்குவதில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், பட்டுத் தொழிலை பாதுகாத்து, பட்டு சார்ந்த தொழிலில் ஈடுபடுவோரின் நலனை காப் பது இந்த சில்க்மார்க் முத்திரை யின் நோக்க மாகும்.
சில்க் மார்க் லேபிளில் உள்ள ‘க்யூஆர்’ குறி யீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பொது மக்கள் வாங் கும் பட்டு தூய்மையானதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே, பட்டு துணி வகைகள் வாங்கும்போது சில்க் மார்க் முத்திரை உள்ளதாஎன கேட்டு பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம்,மோசடிகளை தவிர்க்கமுடியும்.
சில்க் மார்க் லேபிள் இடப் பட்ட பொருட்களை விற்பனை செய்யும் 5,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயனாளி கள் நாடு முழுவதும்உள்ளனர். இவ்வாறு அவர்கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ் நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் டி.சட கோபன், தங்க நகை தரத்தை அறிய ஹால்மார்க் முத்திரை, உணவு பொருட்களின் தரத்தை அறிய அக்மார்க், மின்சாதன பொருட்களின் தரத்தை அறிய ஐஎஸ்ஐ முத்திரை ஆகியவை எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதேபோல், பட்டுதுணிவகையின் தரத்தை அறிய சில்க் மார்க் முத்திரையை கட்டாயமாக்க வேண்டும்’என்றார்.
நிகழ்ச்சியில், அன்னை வயலட் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி முதல்வர் இனிதாலீபனோன் எபன்சி, துணை முதல்வர் ஜாபியா சாலமன், நுகர்வோர் குழு ஒருங்கிணைப் பாளர் க.ஜா.பிரிசில்லா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago