சென்னை: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.லெனின் பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடனடியாக அமல்: தமிழ்நாடு மாநில காங்கிரஸ் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவது என்னவென்றால், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்.அஸ்வத்தாமன் நீக்கப்படுகிறார். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
கட்சியின் கொள்கைகளுக்கும், மதிப்புக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாலும் அவர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைத் தொடர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
» பளுதூக்குதலில் மீராபாய் சானுவுக்கு 4ஆம் இடம்: நூலிழையில் பறிபோன இந்தியாவின் பதக்க வாய்ப்பு!
கட்சியில் நேர்மைமற்றும் ஒழுக்கத்தை பராமரிப்பதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. கட்சியின் நன்மதிப்பைக் காப்பதில் கட்சியின் நடத்தை விதிகளை அனைத்து உறுப்பினர்களும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago