அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 8 மின்சார ரயில் சேவை மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 8 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (ஆக.7) மாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு இன்று காலை 9.10,11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு இன்று காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு இன்று காலை 11.15, நண்பகல் 12.00 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு இன்று நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் - அரக்கோணத்துக்கு இன்று காலை 10மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படஉள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே ரத்து செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்