குட்கா ஊழல் வழக்கில் வினோதம்:அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

By எஸ்.விஜயகுமார்

தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் குட்கா முறைகேடு வழக்கு பிரபலமானது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் சில காவல் அதிகாரிகள் மீது குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து இவர்களை பதவியை விட்டு நீக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல கட்ட விவாதங்களுக்கு பின் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரும் சிபிஐ இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருந்தது.  

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் வினோதமாக அடையாளம் தெரியாத கலால் வரித்துறை, தமிழக உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரி, அரசு அதிகாரிககள், தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக 120-பி(குற்றச்சதி), ஊழல் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குட்காஊழலை முதல்முறையாக கடந்த 2017-ம் ஆண்டு தி இந்து ஆங்கிலம் பத்திரிகை வெளிக்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு 2013-ல் தமிழகத்தில் குட்கா பொருட்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு 2015-ல் அறிவிப்பாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டது. எனினும், பான், குட்கா தயாரிப்பு, விற்பனை படுஜோராக நடைபெற்றது. டன் கணக்கில் அவை தயாரிக்கப்பட்டு, தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது தொடர்ந்தது.

இதற்கு அனைத்து மட்டத்திலும் லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. 2015 ஜூன் மாதம் மாதவரத்தில் ஒரு கிடங்கில் மூட்டை மூட்டையாக மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.

2016-ல் குட்கா கம்பெனி ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின்பேரில் வருமான வரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் கிடைத்த ஒரு டைரியில் தமிழக அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் இருந்தன.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ரூ.39.10 கோடி கையூட்டு பெற்றதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர், தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவுக்கு 2016 ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பினார். அவர் கூடுதல் ஆதாரங்களைக் கேட்க, மீண்டும் வருமான வரித்துறை கூடுதல் ஆதாரங்களை அளித்தது. ஆனால் அதன் பின்னரும், இந்த விவகாரம் பெரிதாகவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த விவகாரத்தை தி இந்து வெளிப்படுத்தியது. ஆனால், தமிழக அரசோ வருமானவரித்துறையிடமிருந்து எந்தவிதமான அறிக்கையும் வரவில்லை என்று தெரிவித்தது.

இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மறுநாள் குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலருக்கு காவல் ஆணையர் ஜார்ஜ் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், ராம்மோகன் ராய் ஒரு பேட்டியின் போது, கூறுகையில், வருமானவரித்துறையிடம் இருந்து அறிக்கையைப் பெற்றேன், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டது. ஆனால், 6 மாதங்களாக எந்தவிதமான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டனர். ஆனால், சிபிஐ விசாரணையை எதிர்த்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகாதாரத்துறையில் பணியாற்றும் அதிகாரி சிவக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் அடையாளம் தெரியாத கலால் வரித்துறை, தமிழக உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரி, அரசு அதிகாரிககள், தனிநபர்கள் ஆகியோருக்கு எதிராக 120-பி(குற்றச்சதி), ஊழல் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழ் சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்