கோவையில் இந்தியா - ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் பங்கேற்பு

By இல.ராஜகோபால்

கோவை: இந்தியா - ஜெர்மனி நாடுகளுக்கு இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் எட்டு நாள் கூட்டுப் போர் பயிற்சி இன்று (ஆக.6) தொடங்கியது.

இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் 8 நாட்கள் கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

முன்னதாக, இன்று போர் விமானத்தை இயக்கி கோவையில் தரையிறங்கிய ஜெர்மன் நாட்டின் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய விமானப் படையுடன் இணைந்து முதல் முறையாக இத்தகைய கூட்டுப் போர் பயிற்சியை கோவை சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்வதில் மகிழ்ச்சி.

ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுவரை இதுபோன்ற கூட்டுப் போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தற்போது இந்தியாவில் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளோம்.

எதிர்வரும் 8 நாட்களும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும் விமானப்படையில் தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும் இது உதவும்” என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்