நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறைக்கு வரவேற்பு; தேவைக்கு அதிகமாக பணம் இருந்தால் போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை: காவல் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை

By இ.ராமகிருஷ்ணன்

போக்குவரத்து போலீஸார் கொண்டு வந்துள்ள நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தேவைக்கு அதிகமான பணம் கையில் வைத்திருக்கும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் ஆர்.சுதாகர் ஆகியோர் நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்தனர். அதன்படி, அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸாரிடம் தொகையை வழங்க வேண்டியதில்லை. மாறாக அஞ்சலகம், பேடிஎம், இ சேவை மையம் உள்பட 6 இடங்களில் செலுத்தலாம். இந்த திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, "சில நேரங்களில் பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே போலீஸார் வழிமறிக்கின்றனர். இந்த புது நடைமுறையால் தேவையில்லாமல் போக்குவரத்து போலீஸார் வழிமறிப்பதில்லை" என்றார்.

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, "லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். போக்குவரத்து போலீஸார் லஞ்சம் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம். புகார் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண் கூறும்போது, "சென்னையில் கடந்த ஆண்டு விபத்தில் 1,347 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை நாங்கள் வழக்காக பார்பது இல்லை. மதிப்புமிக்க உயிராக பார்க்கிறோம். இதனால்தான் சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்கிறோம். அதனால், விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது" என்றார்.

அவசரத் தேவைக்காக போலீஸார் பணம் வைத்திருந்தால் எவ்வளவு பணம் தங்களிடம் உள்ளது, ரூபாய் நோட்டின் வரிசை எண் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் நோட்டில் குறித்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் அதிகமான பணத்துடன் பிடிபட்டால் அதுகுறித்து விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்